கத்தியால் தாக்கி 4 பேர் படுகாயம்

ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் நிலப்பிரச்சினை காரணமாக கத்தியால் தாக்கி 4 பேர் படுகாயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆரணி, ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தில் நிலப்பிரச்சினை காரணமாக கத்தியால் தாக்கி 4 பேர் படுகாயமடைந்து ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆரணி அடுத்த மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் மகன் மாதவன் குடும்பத்தினருக்கும், கோபால்பிள்ளை மகன் சேகர் குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி இருதரப்பினரும் வாய்த்தகராறு செய்து வந்தனர். இந்நிலையில் நிலப்பிரச்சினையில் சர்வேயரை நிலத்தை அளக்க வருமாறு சேகர் குடும்பத்தினர் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மாதவன், இவரது மனைவி கஸ்தூரி, மகன்கள் சோமு, பாபு, குமார், மகள் கனகா ஆகியோர் சேகர் குடும்பத்தைச் சேர்ந்த சேகர் மற்றும் இவரது மனைவி வசந்தா, மகன்கள் குமரேசன், லோகேஷ் ஆகியோரை கத்தியாலும், கையாலும் தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த சேகர் குடும்பத்தைச்சேர்ந்த 4 பேரையும் ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். இது குறித்து ஆரணி சேகர் புகார் கொடுத்ததின்பேரில் ஆரணி கிராமிய போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story