ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை..*

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை..*
X
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை..*
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் வேட்டை நாய்கள் வைத்து மான் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்து விசாரணை.. விருதுநர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பகுதியில் விவசாய நிலத்திற்குள் வரும் மான்களை வேட்டை நாய்கள் வைத்து மர்ம நபர்கள் சிலர் வேட்டையாடுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் தேவராஜ் உத்தரவின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகர் செல்லமணி தலைமையிலான வனத்துறையினர் மலையடிவாரப் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ரெங்கர் கோயில் பீட்டிற்கு உட்பட்ட விவசாய தோட்டத்தில் மான் வேட்டையில் ஈடுபட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி தெருவே சேர்ந்த தங்கராஜ்,முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் திருவண்ணாமலை சேர்ந்த சந்திரகுமார் நாகராஜ் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்களிடமிருந்து மான் தலை மற்றும் மான் கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story