பணம் வைத்து சூதாடிய 4 பேர் மீது வழக்கு

X
காங்கேயம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது காங்கேயம்-சென்னிமலை ரோடு பகுதியில் சரவணன் (வயது 48), சிவகுமார் (47), குமார் ( 42), நசீர்அகமது(54) ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story

