ஓசூர்: தொழில் அதிபர் டூவீலரில் வைத்திருந்த 4 லட்சம் ரூபாய் திருட்டு

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பாகலூர் சாய்பாபா கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (39) தொழில் அதிபர். இவர் நேற்று இவர் பெலத்தூர் சர்க்கிளில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் 4 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு தனது டூவீலரில் வைத்து விட்டு சிறிது துரத்தில் டூவீலரை நிறுத்திவிட்டு அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் டூவீலரில் பணத்தை இருந்த எடுக்க அங்கு வந்த சுரேஷ் பணம் மாயமாகி இருப்தை கண்டு அறிந்து அதிர்ச்சியடைந்தார். இந்த குறித்து பாகலூர் போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

