சேலம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 மாதிரி தேர்வு

X
சேலம் கோரிமேட்டில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அரசு தேர்வுக்காக பல்வேறு பயிற்சிகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 187 பேர் எழுதினர். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மதியம் 1 மணி வரை நடந்தது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தேர்வாணையம் நடத்துவது போல் வினாத்தாள் வழங்கப்பட்டு அதன் விடையை எழுதுவதற்காக ஓ.எம்.ஆர். சீட்டும் வழங்கப்பட்டது. இந்த தேர்வை இளைஞர்கள், பெண்கள் ஆர்வமுடன் எழுதினர். பின்னர் உடனடியாக விடைத்தாள் திருத்தப்பட்டு அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
Next Story

