நாமக்கல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த 4 பேர் கைது.

X
NAMAKKAL KING 24X7 B |26 April 2025 4:03 PM ISTநாமக்கல் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனை செய்தலில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது.நாமக்கல் போலீஸ் எஸ்.பி. ராஜேஸ்கண்ணன், ஏடிஎஸ்பி தனராசு ஆகியோ தலைமையில், கொல்லிமலை, பேளுக்குறிச்சி, திருச்செங்கோடு மற்றும் நல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் மதுவிலக்கு வேட்டை நடைபெற்றது.இந்த சோதனையில் நல்லூர் அருகில் உள்ள குன்னமலை கிராமத்தை சேர்ந்த முத்துசாமி(63), சாமிநாதன்(61) ஆகியோரிடமிருந்து 17 லிட்டர் சாராயம் மற்றும் 30 லிட்டர் சாராய ஊரல் கைப்பற்றப்பட்டது. திடுமல் தாசம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பூபதி(62) என்பவரிடமிருந்து 25லிட்டர் சாராய ஊரல், கல்லாங்காட்டுபுதூர் கொண்டரசம்பாளையம் சேர்ந்த கிராமத்தை பாலசுப்ரமணி(64) என்பவரிடமிருந்து 4லிட்டர் சாரா மற்றும் 20லிட்டர் சாராய ஊரல் ஆகியவை கைப்பற்றப்பட்டது.கள்ளச்சாரயம் காய்ச்சுதல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் ஊரில் நடைபெறும் கோயில் திருவிழாவை முன்னிட்டு கள்ளச்சாரயம் காய்ச்சி விற்பனை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு, யாரேனும் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. எச்சரித்துள்ளார்.
Next Story
