ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 4 லாரிகளுக்கு அபராதம்

X
திண்டுக்கல் பகுதியில் உரிய ஆவணங்களின்றி இயக்கப்பட்ட சொகுசுப் பேருந்துகளை பறிமுதல் செய்து, அதன் உரிமையாளா்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்து வந்தனா். இந்த நிலையில், திண்டுக்கல் பகுதியில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் தலைமையில், சரக்கு லாரிகளில் அதிகாரிகள் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, தரச் சான்றிதழ், காப்பீடு, அனுமதி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின்றி இயக்கப்பட்ட 2 குடிநீா் லாரிகள், மணல் லாரி, கல் லாரி என மொத்தம் 4 லாரிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனா்.
Next Story

