மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கார் மீது டூ வீலர் மோதி விபத்து. கணவன் மனைவி மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயம்
மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே கார் மீது டூ வீலர் மோதி விபத்து. கணவன் மனைவி மருத்துவர்கள் உள்ளிட்ட 4 பேர் படுகாயம் கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் டீக்குபுரா ஸ்ரீகாந்த் வயது 38. மருத்துவர். இவரது காரில் இவரது மனைவி சுரபி பாபு வயது 32( மருத்துவர்) மகள் சியார்சவன்யா வயது 06. இவர்கள் மூன்று பேரும் மே 16ம் தேதி மதியம் 2:30 மணி அளவில் கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். இவர்களது வாகனம் மணல்மேடு பஸ் ஸ்டாப் அருகே வந்தபோது எதிர் திசையில், கரூர், வெண்ணமலை, சண்முகா நகர் பகுதியைச் சேர்ந்த யுவராஜ் வயது 44 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர்,டீக்குபுரா ஸ்ரீகாந்த் ஓட்டி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் வந்த மூவரும் டூவீலரில் மோதிய யுவராஜும் படுகாயம் அடைந்தனர். காரில் வந்த மூவரையும் கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். யுவராஜை திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தவர். சம்பவம் தொடர்பாக மருத்துவர் சுரபி பாபு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை பேர் கொண்ட காவல் துறையினர், டூவீலரில் வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் போட்டி விபத்து ஏற்படுத்திய யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்தனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story





