காளை அருகே தகராறு 4 பேர் மீது வழக்கு பதிவு

X
விழுப்புரம் அடுத்த மல்லிகைப்பட்டைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன்கள் அசோக்குமார், 26; அஜித்குமார், 24; இருவரும் வீடு கட்டுவதற்கு தந்தை அண்ணாமலையிடம் பணம் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில், அண்ணாமலை, 47; மற்றும் அவரது தம்பி கந்தன், 45; ஆகியோர், அசோக்குமார், அஜித்குமாரை தாக்கி மிரட்டினர். இதில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 4 பேர் மீதும் காணை போலீசார் வழக்குப் பதிந்து அண்ணாமலையை கைது செய்தனர்.
Next Story

