கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4பேர் குண்டாஸ்!

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4பேர் குண்டாஸ்!
X
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு.
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பு. தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் கடந்த 21.04.2025 அன்று திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த தங்கராஜா (எ) ராஜா (28) என்பவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் S.S மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர்களான சிலுவை ஆகாஷ் (எ) ஆகாஷ் (24), நக்சன் (20), மரிய தாமஸ் டினோ (எ) டினோ (24), மைக்கேல் ஜோவின் (எ) ஜோவின் (19) ஆகிய 4பேர்கள் மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் வடபாகம் காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story