தளி அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை

தளி அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை
X
தளி அருகே திருமணமான 4 நாட்களில் புதுப்பெண் தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகேயுள்ள கல்லுபாளம் பகுதியை சேர்ந்தவர் மோகன். இவருடைய மனைவி மீனா (21) இவர்களுக்கு கடந்த 11-ஆம் தேதி அன்று திருமணம் நடைப்பெற்றது. மீனாவிற்கு ஏற்கனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவருடன் பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார். இந்த நிலையில் அவரது பெற்றோர் கட்டாயப்படுத்தி அவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இதில் மனமுடைந்த மீனா விஷம் குடித்து மaங்கிய நிலையில் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி மீனா நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story