திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனை குறித்த துண்டு பிரசுரங்கள் விநியோகம்.

X
ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து அனைத்து வியாபாரிகளிடமும் திமுக ஆட்சியின் 4 ஆண்டு சாதனைகள் குறித்த துண்டு பிரசுரங்களை ஆரணி எம்.பி விநியோகம் செய்தார். தமிழக அரசின் 4 ஆண்டு சாதனைகளான மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.1000, மகளிர்களுக்கு இலவச பேருந்து, பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை குறித்த துண்டு பிரசுரங்களை ஆரணி அண்ணாசிலை அருகிலிருந்து மணிகூண்டு வரையில் உள்ள அனைத்து வியாபாரிகளிடமும் ஆரணி எம்.பி எம்.எஸ்.தரணிவேந்தன் கடை, கடையாக விநியோகம் செய்தார். மேலும் பொதுமக்களிடமும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். இதில் முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிவானந்தம், ஆரணி நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி, ஆரணி தொகுதி பொறுப்பாளர் எஸ்.எஸ்.அன்பழகன், மாவட்டஇணைசெயலாளர் ஜெயராணிரவி, மாவட்டபொருளாளர் தட்சிணாமூர்த்தி, ஒன்றியசெயலாளர்கள் மாமது, மோகன், சுந்தர், மாவட்டஅயலக அணி அமைப்பாளர் கப்பல் இ.கங்காதரன், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.எம்.ரஞ்சித், சுற்றுச்சூழல் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.எச்.இப்ராகிம், சிறுபான்மை பிரிவு மாவட்டசெயலாளர் அப்சல்பாஷா, நகரமன்ற உறுப்பினர் மாலிக்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Next Story

