அங்கன்வாடி நேர்முகத் தேர்வு: 4 பணியிடத்திற்கு குவிந்த பெண்கள்!

அங்கன்வாடி நேர்முகத் தேர்வு: 4 பணியிடத்திற்கு குவிந்த பெண்கள்!
X
சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கான நேர்காணலில் 208 பேர்கள் பங்கேற்றனர்
சாத்தான்குளம் ஒன்றியத்தில் 4 பணியிடத்திற்கு அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கான நேர்காணலில் 208 பேர்கள் பங்கேற்றனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் ஒன்றியத்தில் தோப்பூர், தச்சமொழி, கடக்குளம், சித்தன்குடியிருப்பு ஆகிய அங்கன்வாடி மைய பணியாளர்கள் தேர்வு செய்ய தகுதியான பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் சாத்தான்குளம் ஊராட்சி ஒன்ரிய அலுவலகத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.  நேர்காணலில் மாவட்ட திட்ட அலுவலரும், சாத்தான்குளம் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவவலருமான காயத்ரி, தலைமையில் என்.எம்.பி நேர்முக உதவியாளர், வட்டார மருத்துவ அலுவலர் ஐலின்சுமதி. மருத்துவ அலுவலர் ஸ்வீட்லின் சசிதா ஆகியோர் பங்கேற்று நேர்காணலை நடத்தினர். இதில் 4 பணியிடங்களுக்கு 208 பேர்கள் விண்ணப்பிருந்தனர்.  அதில் தச்சமொழி அங்கன்வாடி மைய 1 பணியிடத்திற்கு 145 பேர்கள் விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் கடிதம் அனுப்பி வரவழைக்கப்பட்டு இருந்தனர். சாத்தான்குளம் ஒன்றிய அலுவலகத்தில் நேர்காணல் காலை 10மணிக்கு தொடங்கி மாலை வரை நடைபெற்றது. அங்கன்வாடி மைய பணியிடத்திற்கு பட்டதாரி பெண்கள், விதவை பெண்கள் என பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
Next Story