சேலம் சூரமங்கலத்தில் உறவினர்கள் என கூறி மூதாட்டி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு

சேலம் சூரமங்கலத்தில் உறவினர்கள் என கூறி மூதாட்டி வீட்டில் 4 பவுன் நகை திருட்டு
X
பெண் உள்பட 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம் சூரமங்கலம் பத்மாவதி காலனியை சேர்ந்தவர் தஞ்சையம்மாள் (வயது 85). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு 35 வயதுடைய ஆண் ஒருவரும், 30 வயதுடைய பெண் ஒருவரும் வந்தனர். அவர்கள் தங்களை உறவினர்கள் என கூறி மூதாட்டியிடம் பேசி கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மூதாட்டியிடம் டி.வி.யை போடுமாறு கூறினர். இதனால் மூதாட்டி டி.வி.யை போட சென்றார். அப்போது அவரது கவனத்தை திசை திருப்பி பீரோவில் இருந்து 4 பவுன் நகையை அவர்கள் நைசாக திருடி சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து மூதாட்டி பீரோவை திறந்து பார்த்தார். அப்போது நகை திருட்டு போனது ெதாியவந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் உள்பட 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story