போக்சோ வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை

X
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ம் ஆண்டு 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த வழக்கில் அய்யலூர் S.K நகர் பகுதியைச் சேர்ந்த முத்துக்குமார்(41) என்பவரை வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அறிவுறுத்தலின்படி வடமதுரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் உமா மகேஸ்வரி, நீதிமன்ற முதல்நிலைக் காவலர் பொன்மணி மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி சீரிய முயற்சியால் திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் குற்றவாளி முத்துக்குமார் என்பவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.21,000/- அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்கள். மேலும் இந்தாண்டு இதுவரை 30 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story

