ஆடுகளைப் கடித்துக் கூறிய வெறிநாய் - 4 ஆடுகள் உயிரிழப்பு!

ஆடுகளைப் கடித்துக் கூறிய வெறிநாய் - 4 ஆடுகள் உயிரிழப்பு!
X
கோவில்பட்டி அருகே ஆடுகளைப் கடித்துக் கூறிய வெறிநாய் - 4 ஆடுகள் உயிரிழப்பு தொடர்ந்து ஆடுகள்,கோழிகள் என கால்நடைகளை வெறிநாய் கடித்து வருவதால் கால்நடை வளர்ப்போர் அவதி
கோவில்பட்டி அருகே ஆடுகளைப் கடித்துக் கூறிய வெறிநாய் - 4 ஆடுகள் உயிரிழப்பு தொடர்ந்து ஆடுகள்,கோழிகள் என கால்நடைகளை வெறிநாய் கடித்து வருவதால் கால்நடை வளர்ப்போர் அவதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை கே.லட்சுமிபுரத்தினை சேர்ந்தவர் குமார். இவர் ஆடு, கோழி வளர்ப்பு என கால்நடை வளர்ப்பு தொழில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இன்று காலையில் இவரது தொழுவத்தில் இருந்த 4 ஆடுகளை கிராமத்தில் சுற்றி வரக்கூடிய ஒரு வெறி நாய் கடித்ததில் நான்கு ஆடுகளும் பரிதாபமாக உயிரிழந்தன. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே நாய் குமாரின் மூன்று ஆடுகள், இரண்டு வான்கோழிகளை கடித்ததில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது ஊராட்சியிலும் காவல்துறையிலும் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கும் எடுக்கவில்லை என்பதால் தொடர்ந்து தனது கால்நடைகளை வெறி நாய் கடித்து உயிரிழந்து வருவதால் தனது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குமார் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இனியாவது ஊரில் சுற்றி தெரியும் வெறி நாயை அப்புறப்படுத்த வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளார்
Next Story