கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது

கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது
X
திண்டுக்கல் அருகே அருகே கடமான் வேட்டையாடிய 4 பேர் கைது, நாட்டுதுப்பாக்கி, இறைச்சி பறிமுதல்
திண்டுக்கல் அருகே வனப்பகுதியில் கடமான் வேட்டையாடப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கன்னிவாடி வனத்துறை வனவர் வெற்றிவேல் தலைமையிலான வனத்துறையினர் சின்னாளப்பட்டி அருகே செட்டியபட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அவ்வழியாக சந்தேகத்திற்கு இடமாக சாக்கு முட்டையுடன் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் அவர்கள் சின்னாளபட்டியை சேர்ந்த கோபிநாத், கலிக்கம்பட்டியை சேர்ந்த வேளாங்கண்ணி, வெள்ளோடு பகுதியை சேர்ந்த மாணிக்கம், அமலிநகர் பகுதியை சேர்ந்த அந்தோணி என்பதும், கடமான் வேட்டையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனைதொடர்ந்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கடமான்இறைச்சி, மான்தோல், ரெட்டைகுழல் துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story