பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு

பெண்ணை தாக்கியதாக 4 பேர் மீது வழக்கு
X
வெள்ளிச்சந்தை
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் தேவதாஸ் மனைவி சான்லி (55). மண்ணெண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். இது தொடர்பாக சான்லிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜோசப் (50), அவரது மனைவி லாரன்ஸ் மேரி ( 44.) என்பவர்களுக்கு மிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சம்பவ தினம் இரவில் சான்லி வீட்டு முன்பு டெம்போ வண்டி வந்த போது லாரன்ஸ் மேரியும் ஜோசப்பும் தட்டிக் கேட்டதில் அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைத்த சான்லி அதே பகுதியைச் சேர்ந்த நபினா ( 25), ஸ்டெனோ (36) சுபின் (30) ஆகியோருடன் சேர்ந்து லாரன்ஸ் மேரியை தாக்கினார்கள். இது தொடர்பாக இரு தரப்பினரும் வெள்ளி சந்தை போலீசில் புகார் அளித்து அங்கு நடந்த பேச்சுவார்த்தையில் இருவரும் சமாதானமாக செல்வதாக கூறினர். ஆனால் மனவேதனையில் இருந்த லாரன்ஸ் மேரி நேற்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை பரிசீலித்த எஸ் பி ஸ்டாலின் உடனே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் லாரன்ஸ் மேரியை தாக்கிய சான்லி, நபினா, ஸ்டெனோ, சுபின் ஆகியோர் மீது வெள்ளிச் சந்தை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
Next Story