கோவை: திருமணமான 4 நாளில் மணப்பெண் தற்கொலை !

கோவை: திருமணமான 4 நாளில் மணப்பெண் தற்கொலை  !
X
கோவில்பாளையம் அருகே கீரணத்தம் பகுதியில், திருமணமான நான்கே நாளில் மணப்பெண் தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்பாளையம் அருகே கீரணத்தம் பகுதியில், திருமணமான நான்கே நாளில் மணப்பெண் தீபிகா தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தேவனம்பட்டி சேர்ந்த தீபிகா, கோவை கீரணத்தத்தைச் சேர்ந்த சரவணனை கடந்த வாரம் திருமணம் செய்துகொண்டார். திருமணத்தையடுத்து, மணமகன், மணப்பெண் மற்றும் இருவர் குடும்பத்தினரும் கீரணத்தம் வந்திருந்தனர். திருமணத்துக்கு பிறகு தீபிகா, கணவரிடம் நெருக்கமின்றி நடந்துகொண்டதாகவும், தன்னுடன் வந்த சகோதரரிடம் நெருங்கி பழகியதாகவும் கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் ஏற்பட்ட சரவணன், தனது மனைவியின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தீபிகாவுடன் வந்த அவரது சகோதரர் ஊருக்குச் செல்வதாக கிளம்பிய நிலையில், சரவணன் அவரை வழியனுப்ப சென்றுள்ளார். அதற்குள் வீட்டில் தனியாக இருந்த தீபிகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதை கண்ட மாப்பிள்ளையின் பெற்றோர் போலீசுக்கு தகவல் அளித்தனர். கோவில்பாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது கோட்டாட்சியர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Next Story