சமையல் கியாஸ் தொழிலாளர்கள் போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு

X
சேலம் கருப்பூரில் மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சமையல் கியாஸ் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் சிலர் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், பணி நீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு, மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தொழிலாளர்கள் கடந்த 12-ந் தேதி போராட்டத்தை தொடங்கினர். தொடர்ந்து நேற்று 4-வது நாளாக போராட்டம் நடைபெற்றது. இதில் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

