மத்தூர்:காதல் திருமண விவகாரத்தில் பெண்ணை தாக்கிய 4 பேருக்கு காப்பு.

X
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே எட்டிப்பட்டியை சேர்ந் தவர் மாதம்மாள் (38) இவரது மகள் ஜோதிலட்சுமி கடந்த 16- ம் தேதி கல்லூரிக்கு சென்றவர் மீண்டும் அவர் வரவில்லை என்று தாய் மாதம்மாள் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் இடையே ஜோதிலட்சுமி தனது காதலன் வேலு என்பவருடன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக வந்தார். இதை அறிந்த மாதம்மாள் மத்தூர் போலீஸ் நிலையம் வந்தார். அந்த நேரம் ஏற்பட்ட பிரச்சினையில் மாதம்மாளை சவரிநாதன் (25), கோகுல்ராஜ் (23) உள்பட சிலர் தாக்கினார்கள். அது தொடர்பாக சவரிநாதன், கோகுல்ராஜ், ஜீவராஜ் (25), கேசவன் (23) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story

