மத்தூர் அருகே 4 யூனிட் மணல் கடத்திய கனரக இயந்திரம் டிப்பர் லாரி பறிமுதல்.

மத்தூர் அருகே 4 யூனிட் மணல் கடத்திய கனரக இயந்திரம் டிப்பர் லாரி பறிமுதல்.
X
மத்தூர் அருகே 4 யூனிட் மணல் கடத்திய கனரக இயந்திரம் டிப்பர் லாரி பறிமுதல்.
கிருஷ்ணகிரி மவட்டம் மத்தூர் அருகேயுள்ள எம்.நடுபட்டு ஆற்றில் அரசு அனுமதி இன்றி மணல் கடத்துவதாக மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவன் பேரில் மத்தூர் காவல் ஆய்வாளர் பத்மாவதி தலைமையில் போலீசார் மற்றும் தனிபடை போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது. நடுப்பட்டு துலாநிதி ஆற்றில் கனரக இயந்திரம் மூலம் டிப்பர் லாரியில் 4 யூனிட் மணல் கடத்துவது தெரியவந்தது. இதில் மணல் கடத்திய திருப்ப-த்தூர் மாவட்டம் காக்கங்கரை பகுதியைச் சேர்ந்த வினேத்(30) டிப்பர் லாரியின் உரிமையாளர் மற்றும் டிரைவரான இவர் போலீசாரை கண்டதும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதனை அடுத்து போலீசார் மணல் அள்ளிய கனரக இயந்திரத்தையும் 4 யூனிட் மணலுடன் வழக்கு பதிவு செய்து டிப்பர் லாரியும் பறிமுதல் செய்து தப்பி ஓடிய டிப்பர் லாரியின் உரிமையாளர் வினோத்தை போலீசார் தேடி வருகின்றார்.
Next Story