பாணாவரம் ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது

பாணாவரம் ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது
X
பாணாவரம் ஊழியர் கொலை வழக்கில் 4 பேர் கைது
காவேரிப்பாக்கம் அடுத்த பாணாவரம். அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பால கிருஷ்ணன் (வயது 42). சோளிங்கர் அருகே புலிவலம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 21-ந் தேதி பிள்ளையார் குப்பம் ரோடு செங்கல் சூளை அருகே வந்தபோது மர்மநபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்தனர். இச்சம்பவம் குறித்து பாணாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர். துணை எஸ்பி ஜாபர் சித்திக் தலைமையில் 3 தணிப்ப டைகள் அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பொன்னப்பந்தங்கல் கூட்ரோடு பகுதியில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் சோளிங்கரில் வாலாஜா சாலை பாறைமேடு பகுதியை சேர்ந்த முருகேசன் (44), வள்ளுவம்பாக்கம் அடுத்த ராமாபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த மோகன் (53) என்பதும், பாலகிருஷ்ணன் கொலை சம்பவத்தில் தொடர்புடையதும் தெரியவந்தது. பாலகிருஷ்ணன், தனது மனைவி வெண் சங்கீதா ணிலாவின் சகோதரி மகளை பன்னியூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து இருந்த நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தி ஒன்று சேர்த்து வைப்பதற்காக பாலகிருஷ்ணன் முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட முன் விரோ தம் காரணமாக கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த காவேரிப்பாக்கம் அடுத்த பன்னியூர் கிராமத்தை சேர்ந்த யுவராஜ் (38) நேற்று சோளிங்கர் கோர்ட்டில் சரணடைந்தார். அதேபோல் பாண்டிய நல்லூர் பஸ் நிறுத்தத்தில் சுற்றி திரிந்த இந்த கொலை வழக் கில் தேடப்பட்டு வந்த திருவண்ணாமலை மாவட்டம், சித்தாத்தூர் கிராமத்தை சேர்ந்த சங்கீதா (25) என்பவரையும் போலீ சார் கைது செய்தனர். இவர் யுவராஜின் கள்ளக்காதலி என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இக்கொலை வழக்கில் தொடர்புடையவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story