களியக்காவிளை : 4 டிப்பர் லாறிகள் பறிமுதல்

களியக்காவிளை : 4  டிப்பர் லாறிகள் பறிமுதல்
X
4 பேர் கைது
கேரளா மாநிலம் பாறசாலை பகுதியை சார்ந்த சதீஷ் (26). கிளினர் ஜேம்ஸ் (24) பிரமோத் (34) உள்ளிட்டோர் டிப்பர் லாரியில் ரூ25 ஆயிரம் மதிப்புள்ள 33 யூனிட் எம் சான்ட் டிப்பர் லாரியில் ஏற்றிக் கொண்டு குமரி மாவட்டம் அடைக்காகுழி பகுதியில் சென்ற போது போலீசார் லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் இருந்து ஜல்லி ஏற்றிக் கொண்டு அடைக்காகுழிக்கு செல்வதாக அனுமதி சீட்டு வாங்கி வைத்துள்ளனர். இவர்களை கைது செய்த போலீசார். தொடர்ந்து நிறுத்தப்பட்டிருந்த மற்றொரு டிப்பர் லாரியை சோதனையிட்டனர். அந்த லாரியில் 25 ஆயிரம் மதிப்புள்ள 33 யூனிட் ஜல்லிகள் ஏற்றப்பட்டு இருந்தது. லாரியில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவர் பள்ளியாடி சேரிக்கடை பகுதியை சார்ந்த லாறி டிரைவர் ரவிக்குமார் (44) என்பது தெரிய வந்தது . இந்த இரண்டு டிப்பர் லாறியும் பிரமோத் என்பவருக்கு சொந்தமானது ஆகும். தொடந்து நடத்திய சோதனையில் நள்ளிரவில் மேலும் ஒரு டிப்பர் லாறியில் கனிம வளம் கடத்தி வரப்பட்டதை பார்த்த போலீசார் லாரியை தடுத்து நிறுத்தினார். டிரைவர் தப்பி ஓடினார். லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பிரமோத், சதீஷ், ரவிக்குமார், கிளினர் ஜேம்ஸ் உள்ளிட்ட நான்கு பேரையும் தைது செய்து 3 டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்தனர். ஒருவர் தப்பி ஓடினார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story