திருச்சி அருகே 4 கிலோ கஞ்சா பறிமுதல்

X
திருச்சி மாநகர மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு திருச்சி -திண்டுக்கல் ரோடு கோரையாறு வாய்க்கால் கரையோரம் கஞ்சா விற் பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக சப்-இன்ஸ்பெக்டர் மாதரசி ஸ்டெல்லா மேரி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த திருச்சி ராம்ஜி நகர் மலைப் பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (34) என்பவரை கைது செய்தனர். மேலும் அவர் பதுக்கி வைத்திருந்த 4 கிலோ 120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.41 ஆயிரம் ஆகும்.
Next Story

