அரசு கலை கல்லூரியில் 4ம் கட்ட கலந்தாய்வு!

X
வேலூர் அரசினர் முத்துரங்கம் கலைக் கல்லூரியில், 4-ம் கட்ட கலந்தாய்வு நிறைவடைந்தது. இதுவரை 815 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 169 இடங்களுக்கான 5ஆம் கட்ட கலந்தாய்வு நாளை ஜூலை 04 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பி.ஏ. தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளியல், பி.காம் வணிகவியல், பி.பி.ஏ. வணிக நிர்வாகவியல் மற்றும் பி.எஸ்.சி. ஆகிய பாடங்களுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. மாணவர்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

