தமிழ்நாடு அரசு 4 ஆண்டு சாதனை புகைப்பட கண்காட்சி கோவையில் தொடக்கம் !
தமிழ்நாடு அரசின் நான்கு ஆண்டுகால சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி, கோவை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர காவல் ஆணையாளர் சரவணசுந்தர், காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மேயர் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர். இந்த மூன்று நாள் கண்காட்சியில், தமிழக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைத்த நன்மைகள் விளக்கமாகப் பிரதேசப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்தும் உணவு வழங்கல் துறை சார்பில் நடமாடும் விழிப்புணர்வு வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
Next Story




