புளியங்குடியில் 4 கோடி செலவில் கட்டப்பட்ட தினசரி நாளங்காடி கட்டிடம் திறப்பு

புளியங்குடியில் 4 கோடி செலவில் கட்டப்பட்ட தினசரி நாளங்காடி கட்டிடம் திறப்பு
X
4 கோடி செலவில் கட்டப்பட்ட தினசரி நாளங்காடி கட்டிடம் திறப்பு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே புளியங்குடி நகராட்சியில் புதிதாக கட்டப்பட்ட காந்தி நினைவு தினசரி நாளங்காடி கடைகளை வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைக்குமார் வியாபாரிகளிடம் ஒப்படைத்தார். புளியங்குடி காந்தி தினசரி மார்க்கெட் அரசு மருத்துவமனை அருகில் இயங்கி வந்தது , நிரந்தர கட்டிடம் இல்லாததாலும் இட நெருக்கடி காரணமாக வாகனங்கள் வந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டது . தொடர்ந்து வியாபாரிகள், மற்றும் பொதுமக்கள் காந்தி மார்க்கெட்டில் புதிதாக கடைகள் கட்ட வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி 74 கடைகள் கட்டுவதற்க்கு தமிழக அரசு சார்பில் 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது . புதிய கடைகள் கட்டுவதற்க்கான கட்டுமான பணிகள் வேகமாக . முடிந்து கடந்த மாதம் உள்ளாட்சி துறை அமைச்சர் கேஎன் நேரு காந்தி நினைவு தினசரி நாளங்காடியை திறந்து வைத்தார். தொடர்ந்து காலை நகராட்சி சார்பில் கடைகளை வியாபாரிகளுக்கு ஒதுக்கீடு செய்து ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது மார்க்கெட் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு நகர் மன்ற தலைவர் விஜயா சவுந்திரபாண்டியன் தலைமை வகித்தார், நகர் மன்ற துணை தலைவரும் நகர கிழக்கு பகுதி செயலாளருமான அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர் பத்திரம் சாகுல் ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கெட் சங்க தலைவர் குருவி முருகன் அனைவரையும் வரவேற்றார். இதில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார் கலந்து கொண்டு வியாபாரிகளிடம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளுக்கான சாவியை வழங்கினார் விழாவில்,மாவட்ட வியாபாரிகள் சங்க தலைவர் காஜா மைதீன், நகர தலைவர் ராமகிருஷ்ணன், நிர்வாகிகள் கந்தசாமி, திமுக மேற்கு பகுதி செயலாளர் நாகூர் கனி , மதிமுக நகர செயலாளர் ஜாகீர் உசேன், மமக மாவட்ட செயலாளர் அப்துல் ரகுமான், இ கம்யூ நகர செயலாளர் சீனி, , கவுன்சிலர்கள் பிவி பாலசுப்ரமணியன், பொன்னு துரைச்சி, காந்திமதி, உமா, மகேஷ்வரி, சித்ரா, வள்ளி, தங்கம், சங்கர நாராயணன், செந்தாமரை, சண்முகப்பிரியா, பாக்கியம், , வள்ளி உட்பட ஏராளமான திமுக நிர்வாகிகள், மார்க்கெட் வியாபாரிகள், ,நகராட்சி பணியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்
Next Story