மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி நடைபெற்றது

X
மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி மேரா யுவ பாரத் பிளான்ட் 4 மதர் நிகழ்ச்சி உதகை பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மேரா யுவ பாரத் ரஞ்சித் குமார் அனைவரையும் வரவேற்றார். பெத்லகேம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் சகாயமேரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக நீலகிரி மாவட்டம் சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் ரமணா, நீலகிரி எஜீகேஷனல் டிரஸ்ட் ஜாபர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர். மாணவிகளுக்கு கவிதை மற்றும் ஓவியப் போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. பெத்தில் ஸ்கூல் ஆஃப் மியூசிக் அகாடெமி ஷாம் நன்றி கூறினார். புலவர் இர.நாகராஜ் நிகழ்ச்சியைத் ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார்.
Next Story

