குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்

குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் சாலை மறியல்
X
திண்டுக்கல் எம்.எஸ்.பி பள்ளியில் குரூப் 4 தேர்வு எழுத வந்தவர்கள் உள்ளே அனுமதிக்காததால் சாலை மறியல்
3,935 பணியிடங்களுக்கான டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் 314 மையங்களில் 13 லட்சத்து 89 ஆயிரம் பேர் தேர்வெழுதுகின்றனர். இந்த தேர்விற்காக நீண்ட நாட்கள் மிகவும் கஷ்டப்பட்டு பயிற்சி எடுத்து தேர்வுக்கு தயாராகி வந்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் எம்.எஸ்.பி மேல்நிலைப்பள்ளி, ஆத்தூர் வட்டம் சின்னாளப்பட்டி தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி (ம) தேவாங்கர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பார்வதி கலை அறிவியல் கல்லூரி, புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, புனித ஆண்டனி மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. திண்டுக்கல் ஜி டி என் சாலையில் உள்ள எம் எஸ் பி மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுத வந்தவர்கள் சரியாக காலை 9:00 மணிக்கு வந்ததால் உள்ளே அனுமதிக்காமல் போலீசார் கதவை அடைத்து விட்டதாக கூறப்படுகிறது. தேர்வு எழுத வந்தவர்கள் போலீசாரிடம் கேட்டபோது 8:45 மணிக்கு வரவேண்டும் இல்லையென்றால் உள்ளே அனுமதிக்க முடியாது எனக் கூறியதாக சொல்கின்றனர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தேர்வு எழுத வந்தவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
Next Story