தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

X
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி மற்றும் திருச்சுழி கல்லூரணி எஸ்.பி.கே. மேல்நிலைப்பள்ளி ஆகிய தேர்வு மையங்களில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக, விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், கண்காணிப்பு அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு தேர்வு குறித்த உரிய அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக குரூப்-4-ல் பல்வேறு காலியிடங்களுக்கு போட்டித்தேர்வுகள் இன்று தமிழகம் முழுவதும் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் 42,231 விண்ணப்பதாரர்கள் தேர்;வு எழுதினர். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துணை வட்டாட்சியர் நிலையில் 34 தேர்வு நடமாடும் குழுக்கள் மற்றும் துணை ஆட்சியர் நிலையில் 10 பறக்கும் படை அலுவலர்களும், 176 தேர்வு மையங்களுக்கு 184 வீடியோகிராபர்களும் நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டனர். அதன்படி, விருதுநகர் வட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 7573 நபர்களில் 6,429 நபர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 25 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 6,892 நபர்களில் 5,909 நபர்களும், காரியாபட்டி வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,755 நபர்களில் 2,419 நபர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 28 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,903 நபர்களில் 7,535 நபர்களும், சாத்தூர் வட்டத்தில் 16 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 4,238 நபர்களில் 3,640 நபர்களும் தேர்வு எழுதினர். சிவகாசி வட்டத்தில் 27 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 8,255 நபர்களில் 6,998 நபர்களும், திருவில்லிப்புத்தூர் வட்டத்தில் 20 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 5,830 நபர்களில் 5,021 நபர்களும், திருச்சுழி வட்டத்தில் 7 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,416 நபர்களில் 1,236 நபர்களும், வெம்பக்கோட்டை வட்டத்தில் 4 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 1,016 நபர்களில் 847 நபர்களும், வத்திராயிருப்பு வட்டத்தில் 10 தேர்வு மையத்தில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 2,576 நபர்களில் 2,197 நபர்களும், என ஆக மொத்தம் மாவட்டத்தில் 176 தேர்வு மையங்களில் நடைபெற்ற தேர்வில் விண்ணப்பித்திருந்த 49,454 நபர்களில் 42,231 நபர்கள் தேர்வு எழுதினர். 7,223 நபர்கள் தேர்வுக்கு வரவில்லை..
Next Story

