கோவையில் குரூப் 4 தேர்வுக்கு நேரம் தவறி வந்த பெண்கள் வாய்ப்பு இழந்த வேதனை!

கோவையில் குரூப் 4 தேர்வுக்கு நேரம் தவறி வந்த பெண்கள் வாய்ப்பு இழந்த வேதனை!
X
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வு இன்று மாநிலம் முழுவதும் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் மட்டும் 50,144 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். 100-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு மற்றும் வீடியோ பதிவு உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தேர்வு காலை 9:30க்கு தொடங்கினாலும், காலை 9 மணிக்கு பிறகு யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லீஜா என்பவர் 7 மாத குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்து தேர்வு எழுத சென்றது பாராட்டை பெற்றது. அதே நேரத்தில், நரசிபுரத்தில் 25 நாட்களான குழந்தையுடன் 9.05 மணிக்கு வந்த காமினி உள்ளிட்ட சில பெண்கள், நேரம் தவறியதால் தேர்வு எழுத முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். பல மாதங்களாக கடுமையாக பாடம் படித்துவிட்டு, கடைசி நேரத்தில் தேர்வை இழந்ததால் அவர்களின் நிலை பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Next Story