சோளிங்கரில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது

சோளிங்கரில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
X
சோளிங்கரில் 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
சோளிங்கர் பகுதியைச் சேர்ந்தவர் சக்கரவர்த்தி. வக்கீலான அவர் பா.ம.க. ஒருங்கிணைந்த இளைஞர் அணி அமைப்பாள ராக இருந்தார். அவர், ஜூன் மாதம் 12-ந்தேதி இரவு 12 மணியளவில் சோளிங்கரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். அவரை, பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற அவர் உயிரிழந்தார். கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். எனினும்,அவர்களின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் நோக்கில் பிரபு (வயது 29), துரைமுருகன் (25), மாதவன் (22), கஜபதிவர்மன் (50) ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி விவேகானந்தசுக்லா மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் ஆட்சியர் சந்திரகலா, 4 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து அதற்கான நகலை 4 பேரிடம் வழங்கி, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story