பொன்னேரியில் 4 வாய்க்கால்களை தூர்வாரி பாசன வசதி ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்

X
அரியலூர், ஜூலை.18- பொன்னேரியில் நான்கு வாய்க்கால்களை தூர்வாரி கடைமடை விவசாயிகளுக்கு பாசன வசதி ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் உலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைக்க கூட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் மணிவேல் கோரிக்கை வைத்து பேசினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் இர மணிவேல் கலந்து கொண்டு கீழ்கண்டவாறு கருத்துக்களை முன்வைத்தார். இயந்திர நடவுக்கு ஏக்கர்க்கு ரூ 4000 மற்றும் கோடை உழவுக்கு ஏக்கர்க்கு ரூ 800 என மானியம் வழங்கிய தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்வது, அதே போல ஆமணக்கந்தோண்டி மற்றும் காட்டகரம் ஊராட்சி மண்டபத்தேரி கிராமத்திற்கு புதிய ரேஷன் கடை திறக்க வலியுறுத்திய நிலையில் ஆமணக்கந்தோண்டி கிராமத்திற்கு புரியரேஷன் கடை திறப்புதற்கு ஆணை வெளியிட்ட தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்தும் பொன்னேரியில் உள்ள 4 வாய்க்கால் தூர்வாரி கடைமடை விவசாயிகளுக்கும் பாசன வசதி ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்வது. அதே போல ஒன்றிய அரசு நிலத்தடி நீர்க்கு வரி விதிப்பதால் விவசாயிகள் பாதிப்படைவார்கள். மாங்காய் உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்காமல் அரியலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்து வருகிறார்கள். கூட்டுறவு வங்கியில் நகை கடன், பயிர் கடன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும், , இலவச பம்பு செட் மின் இணைப்பு கட்டாப்பு தேதி அறிவிக்க வேண்டும். உட்கோட்டை விளாங்குளம் ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்தி கரைகளை பலப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், பாழடைந்த கிணறுகளுக்கு சரி செய்திட ரூ.2.50 லட்சம் மானியம் தருவது சிறப்பான திட்டம் எனவும். அதனை ஜெயங்கொண்டம் கோட்டத்திற்கு ஒதுக்கிடு செய்து தர வேண்டுமென வலியுத்தி பேசினார்.
Next Story

