குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு

X
குமரி மாவட்டம் குளச்சல் அருகே கொட்டில்பாடு பகுதி கே எஸ் எஸ் காலனியை சேர்ந்தவர் ரவி (42). இவர் சொந்தமாக இரண்டு டெம்போக்கள் வைத்து ஓட்டி வருகிறார். டெம்போக்களை அங்குள்ள பெட்ரோல் பேங்க் அருகே இரவு நேரங்களில் நிறுத்துவது வழக்கம். கடந்த 16-ம் தேதி இரண்டு டெம்போக்களை நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். அதன் அருகே குளச்சலை சேர்ந்த ஐசன் வில்பிரட் என்பவரும் தனது 2 டெம்போக்களை நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் டெம்போ எடுக்க சென்றபோது நான்கு டெம்போக்களிலும் பேட்டரிகள் திருட்டு போயிருந்தது தெரிய வந்தது. இது குறித்து ரவி குளச்சல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து டெம்போக்களில் பேட்டரிகளை திட்டிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Next Story

