சேலம் அருகே அரசு பள்ளியில் பீர் குடித்த 4 மாணவர்களிடம் விசாரணை

X
சேலம் மாவட்டம் தேக்கம்பட்டி பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் 4 பேர் பீர் குடித்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ஜெயசீலன், இது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மனிடம் புகார் செய்தார். அதனை தொடர்ந்து அவர் குழந்தைகள் பாகாப்பு நல அதிகாரி ஜெயந்தியிடம் மாணவர்களின் நிலை குறித்து எடுத்து கூறினார். இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலக அதிகாரிகள் ஆலோசனையின்பேரில் 4 மாணவர்களையும் அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து 4 மாணவர்களும் சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டனர். மாணவர்களுக்கு பீர் எப்படி கிடைத்தது? அவர்கள் எந்த டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கினர்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story

