குமரி : புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள்

குமரி :  புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க 4 கேமராக்கள்
X
வனத்துறை தகவல்
குமரி மாவட்டம் கீரிப்பாறையை அடுத்துள்ள பரளியாறு கூப்பு ஒன்று பகுதியில் சுமார் 180 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர்கள் அவர்கள் பெரும்பாலும் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் பால் வெட்டும் தொழில் செய்து வருகிறார்கள் இந்நிலையில் நேற்று காலை 7.00 மணியளவில் அந்த பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்பவருடைய மனைவி லதா ரப்பர் பால் வெட்டுவதற்க்காக வீட்டிலிருந்து கிளம்பிபோகும் போது வழியில் இருந்த பாறையில் ஒரு புலி இருப்பதை கண்டு பதறி கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தத்திலும் புலி அசைவற்றே படுத்து கிடந்தது உடனே இவர் சுதாகரித்து கொண்டு மற்ற ெதாழிலாளிகளுடன் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். அதிகாரிகள் புலிகள் நடமாட்டம் உள்ளதா என்பதை கண்காணிக்க நான்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், குமரி மாவட்டத்தில் புலிகள் நடமாட்டம் குறைவாகவே உள்ளது என்றும் கூறினர்.
Next Story