கோவையில் 4 இடங்களில் ஒலி மாசு கண்காணிப்பு கருவி நிறுவப்படும் !

கோவையில் 4 இடங்களில் ஒலி மாசு கண்காணிப்பு கருவி நிறுவப்படும் !
X
கோவை மாவட்டத்தில் ஒலி மாசு அதிகரித்து வருவதையடுத்து, 4 இடங்களில் சென்சார் கருவிகள் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் ஒலி மாசு அதிகரித்து வருவதையடுத்து, 4 இடங்களில் சென்சார் கருவிகள் நிறுவப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது 3 இடங்களில் காற்று மாசு கண்காணிப்பு நடைமுறையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம், பீளமேடு, கவுண்டம்பாளையம், குறிச்சி பகுதிகளில் 24 மணி நேரமும் ஒலி மாசு அளவை கண்காணிக்கும் வகையில் அடுத்த வாரம் கருவிகள் பொருத்தப்பட உள்ளது. மாநகரில் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், போக்குவரத்து சந்திப்புகள், தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் ஒலி மாசு அதிகரித்து வருவதாகவும், இதை கட்டுப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
Next Story