வளர்ப்பு நாய் குரைத்ததால் தகராறு. தந்தை மகனுக்கு கத்திக்குத்து 4 பேர் கைது.

X
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பி கே ரோடு ராஜு நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் இவர் தனியார் அரிசி மில்லில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மணியால் தங்களது வளர்ப்பு நாய்க்கு வீட்டின் முன்பு சாப்பாடு வைத்த போது அந்த வழியாக சென்ற அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவரை பார்த்து நாய் குரைத்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மதன் மணியாளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனைத் தொடர்ந்து மணியாளின் கணவர் செந்தில் மற்றும் மகன் கோகுல் இருவரும் மதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பாத்திரத்தில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற மதன் சிறிது நேரத்தில் ஆட்களை கூட்டி வந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் செந்தில் மற்றும் மதன் இருவரையும் குத்தி தாக்கியுள்ளார். மேலும் மணியாளையும் கைகளால் தாக்கியுள்ளனர் இதில் படுகாயம் அடைந்த செந்தில் மற்றும் அவரது மகன் கோகுல் இருவரும் காங்கேயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காங்கேயம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட மதன்குமார் சரவணகுமார் கார்த்திக் கோகுல் என நான்கு பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

