கிருஷ்ணகிரி: லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர்காயம்.

கிருஷ்ணகிரி: லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர்காயம்.
X
கிருஷ்ணகிரி: லாரி மீது கார் மோதி விபத்து 4 பேர்காயம்.
சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு நேற்று மாலை கார் கொண்டிருந்த போது கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகில் ஓசூர் சாலையில் கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லாரியின் பின்புறமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூரு எலகங்காவை சேர்ந்த சதீஷ், சுரேந்திரன், வெங்கடேஷ், மேற்கு வங்க மாநிலம் அஷ்ரப் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story