யானை புலி பற்களுடன் 4 பேர் கைது

யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
X
குமரி வனத்துறை நடவடிக்கை
குமரி மாவட்டம் எல்லையோர பகுதி வெள்ளறடையில் இன்று வனத்துறை அதிகாரிகள் சந்தேகமாை வகையில் கையில் ஒரு பையுடன் நின்ற  4 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்களை சோதனை செய்தபோது அதில் 5 யானைப் பல் செட் மற்றும் ஒரு புலிப்பல் ஒரு பழைய யானை தந்தம் கண்டுபிடிக்கப்பட்டது. விசாரித்ததில் அவர்கள் குமரி மாவட்டம் மோதிரமலை பகுதியை சேர்ந்த குட்டப்பன், நாகப்பன் விசுவாம்பரம், ஷாஜகான் என தெரிய வந்தது. அவர்கள் குமரி மாவட்ட வனப்பகுதிகளில் இருந்து இவைகளை வேட்டையடி விற்பனைக்கு கேரள மாநிலத்திற்கு கொண்டு வந்தது தெரிய வந்தது. 4 பேரை கைது செய்து, மேலும் விசாரணை நடந்து வருகிறது.
Next Story