சேலத்தில் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு: திருநங்கைகள் 4 பேர் கைது

சேலத்தில் டிரைவரை தாக்கி செல்போன் பறிப்பு: திருநங்கைகள் 4 பேர் கைது
X
போலீசார் நடவடிக்கை
மதுரையை சேர்ந்தவர் தவம் (வயது 40). இவர் சங்ககிரியில் உள்ள தனியார் லாரி நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 14-ந்தேதி மதுரை செல்வதற்காக அவர் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார். அப்போது 4 திருநங்கைகள் சேர்ந்து அவரிடம் இருந்த செல்போனை பறித்துக்கொண்டு அவரை தாக்கினர். இதில் காயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து அவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநங்கைகள் 4 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த சாத்திரிகா (25), ராங்கீலா (22), சோலையம்மா (25), விசித்திரா (24) ஆகிய திருநங்கைகள் 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் தவத்தை தாக்கியது தெரிந்தது. இதையடுத்து திருநங்கைகள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story