கனிமவளம் கடத்திய 4 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்

கனிமவளம் கடத்திய 4 டாரஸ் வாகனங்கள் பறிமுதல்
X
குமரியில் 4 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட குமாரபுரம் சோதனை சாவடி அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது  போலியான  நடைசீட்டு  பயன்படுத்தி சட்டவிரோதமாக கனிமவளம் ஏற்றி வந்த நான்கு டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.  குவாரி உரிமையாளர், கனரக வாகன உரிமையாளர் மற்றும் டிரைவர்கள் இது வழக்கு பதிவு செய்யப்பட்டது.  மருதங்கோடு செம்மண்சாலையை சேர்ந்த வேலையா மகன் கணேஷ்(53), காஞ்சிரோடு சொறுகோலை சேர்ந்த சவுந்தர்ராஜ் மகன் வினோ(47), ராமவர்மன்சிறையை சேர்ந்த ஸ்டீபன் மகன் ஸ்ரீஜித்(30), இடைக்கோடு ஓணத்தான்கோட்டுவிளையை சேர்ந்த டெல்லஸ் மகன் தினேஷ்(33) ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் .   இந்த  நடவடிக்கையானது மேலும் தீவிர படுத்தப்படும் என்றும் கனிமாவளத்துறையின் முறையான அனுமதிச்சீட்டு இன்றி  சட்டவிரோதமாக கனிமவளம் எடுத்து செல்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்கள்.
Next Story