திருச்செந்தூரில் தங்கரதம் புறப்பாடு 4ம்தேதி முதல் தொடக்கம்!

X
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில், கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் வருகிற 4ஆம் தேதி முதல் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் சு.ஞானசேகரன், வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் தினந்தோறும் மாலை 06.00 மணியளவில் தங்கரதம் பிரகாரம் சுற்றி வருவது வழக்கமாக உள்ளது. இத்திருக்கோயிலில் பெருந்திட்ட வளாக பணிகளின் பகுதியாக கிரிபிரகார தரைதளம் பணிகள் நடைபெற்று வந்ததால், 17.07.2024 முதல் தங்கரதம் புறப்பாடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் கிரிபிராகத்தில் கட்டுமான பணிகள் முடிவுற்ற நிலையில் 04.09.2025 ஆம் தேதி முதல் முன் வழக்கபடியும் பக்தர்கள் விருப்பம் மற்றும் நலன் கருதியும் தங்கரதம் புறப்பாடு மீண்டும் நடைபெற உள்ளது.
Next Story

