ராசிபுரம் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியின் காதை கடித்து குதறிய தெருநாய்: விசிக மனு..

X
Rasipuram King 24x7 |9 Sept 2025 8:25 PM ISTராசிபுரம் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியின் காதை கடித்து குதறிய தெருநாய்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் இந்திரா காலனி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன், வைத்தீஸ்வரி தம்பதியினருக்கு 4 வயதில் தியாசினி என்கிற பெண் குழந்தை உள்ளது. குழந்தை நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் தனது வீட்டின் வெளிப்புற பகுதியில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த தாகவும், அப்போது அவ்வழியாக வந்த தெரு நாய் ஒன்று சிறுமியை கடித்ததில் சிறுமியின் காது துண்டாகிய நிலையில் மேலும் சிறுமியின் உடலில் தலை,கை,கால், வயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடித்த நிலையில் குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் நாயே அடித்து விரட்டினர். நாயை விரட்டிய போது விரட்டிய நபர்களிலும் இருவரை நாய் கடித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் நேற்று மட்டும் தெரு நாய் கடித்ததில் 3 பேர் அப்பகுதியில் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது. காயங்களுடன் மீட்கப்பட்ட சிறுமி தற்போது சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியில் தெரு நாய் ஒன்று கடித்து 7 ஆடுகள் உயிரிழந்த நிலையில் சிறுமி இன்று தெரு நாயாள் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து குழந்தையின் உறவினர்கள் கூறுகையில் தற்போது நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிக அளவில் இருப்பதால் தெருநாய்களை ராசிபுரம் நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும், மேலும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இந்த தெருநாய்கள் கடித்துள்ளது. எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சியின் 4வது வார்டு நகர மன்ற உறுப்பினர் பழனிச்சாமி கட்சி நிர்வாகிகள் உடன் ராசிபுரம் நகராட்சி அலுவலக மேலாளர் அவர்களிடம் மனு அளித்தார். அந்த மனுவில் நகர் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகளவில் உள்ளதாகவும் இதன்மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாதிப்படைவதாகவும் உடனடியாக நகராட்சி அதிகாரிகள் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனு அளித்தனர். கூடிய விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாக பேட்டி அளித்தார்.. தொடர்ந்து ராசிபுரம் பகுதியில் தினந்தோறும் நாய்களின் தொல்லை அதிகரித்த வண்ணமாகவே உள்ளது. இதனால் பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் இரவில் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர்.
Next Story
