கொடைக்கானல் அருகே விபத்து: 4 போ் பலத்த காயம்

X
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செண்பகனூரைச் சோ்ந்தவா் ஆரோக்கியதிலீப் குமாா்(33). இவா் தனது காரில் வத்தலக்குண்டிலிருந்து கொடைக்கானலுக்கு காரை ஓட்டி வந்தாா். இந்தக் காா் அடுக்கம் சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது கொடைக்கானலிருந்து கீழ்நோக்கி வேகமாக வந்த மீட்பு வாகனம் காா் மீது மோதி மலைச் சாலையில் கவிழ்ந்தது. இதனால் அந்தப் பகுதியில் 30 நிமிஷங்கள் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் காா் ஓட்டி வந்த ஆரோக்கிய திலீப்குமாா் (33), காரில் இருந்த ராஜாராம் மனைவி சுதா(33), இவா்களது குழந்தைகளான ஸ்ரீநிதி (13), ஹா்சன்பாலு (10) ஆகிய 4 பேரும் பலத்த காயமடைந்தனா். இதைத்தொடா்ந்து 4 பேரும் மீட்கப்பட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் சிறப்பு உதவி ஆய்வாளா் நீலமேகம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.
Next Story

