ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் திருக்கொடி தீபம் ஏற்றும் நிகழ்வு. புரட்டாசி 4.ம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை...

X
Rasipuram King 24x7 |11 Oct 2025 9:32 PM ISTஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் திருக்கொடி தீபம் ஏற்றும் நிகழ்வு. புரட்டாசி 4.ம் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு பூஜை...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஆத்தூர் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ பட்டை பெருமாள் என்கிற ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் புரட்டாசி நான்காம் சனிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ணன் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. முன்னதாக பால், தயிர், மஞ்சள், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் தங்கக்காப்பு மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து திருக்கோவிலில் திருக்கொடி தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக மேளதாளங்களுடன் பூஜைகள் நடைபெற்று கோவிலில் தீபம் ஏற்றி ஸ்ரீ சந்தான கோபாலகிருஷ்ண ஸ்வாமியை பக்தர்கள் வணங்கினர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த சிறப்பு அலங்காரத்தை கோவில் அர்ச்சகர் ஹரி, மற்றும் அர்ச்சகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
Next Story
