கோவில் பூசாரி கொலை வழக்கில் 4பேரை போலீசார் கைது

X
தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் செல்லதுரை மகன் முருகேசன் (54). இவர் காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உள்ள சுடலைமாடசாமி கோவிலில் பூசாரியாக உள்ளார். நேற்று மாலை இவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவில் பூசாரி முருகேசன் கொலை தொடர்பாக ஆறுமுகநேரி பெருமாள்புரத்தை சேர்ந்த இசக்கிபாண்டி மகன் இசக்கிமுத்து (26) மாரிமுத்து மகன் மாரிசெல்வம் (28), செல்வராஜ் மகன் சுகுமார் (26), மேல ஆத்தூர் கொழுவை நல்லூரை சேர்ந்த பெருமாள் மகன் சங்கர் என்ற சங்கரவேல் (54) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

