கொக்கராயன் பேட்டை பகுதியில் நகராட்சிக்கு சொந்தமாக உள்ள ஆறு ஏக்கர் நிலத்தில் சோலார் பேனல் அமைத்து 4மெகாவாட் மின் உற்பத்திசெய்யநகராட்சி நிர்வாகத்திற்கு எம் எல் ஏ ஈஸ்வரன் ஆலோசனை
Tiruchengode King 24x7 |28 Oct 2025 5:29 PM ISTதிருச்செங்கோடு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தில் (பிஎம் சூர்யகர் முஃ பட் பிஜிலி யோஜனா) சோலார் பேனல் விற்பனையாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நடத்தும் மாபெரும் சோலார் மேளா கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது
திருச்செங்கோடு கோட்டம் நாமக்கல் மின்பகிர்மான வட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தில் (பிஎம் சூர்யகர் முஃ பட் பிஜிலி யோஜனா) சோலார் பேனல் விற்பனையாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நடத்தும் மாபெரும் சோலார் மேளா கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மேளாவை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர் திருச்செங்கோடு அடுத்த கொக்கராயன் பேட்டை பகுதியிலுள்ள நகராட்சிக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தில் சோலார் பேனல் அமைத்து நகருக்கு தேவையான மின்சாரத்தை பெறலாம் மேலும்பேருந்து நிலையத்தின் மேல் பகுதி அரசு அலுவலகங்களின் மேல் பகுதிகளில் சோலார் பேனல் அமைத்து மின்சாரம் பெறலாம்இதன் மூலம் நகராட்சியின் மின் கட்டண சுமை குறையும் திருச்செங்கோட்டில் நடந்த சோலார் பேனல் மேளா நிகழ்ச்சியை தொடங்கி வைத்த திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன்நகராட்சி நிர்வாகத்திற்கு ஆலோசனை திருச்செங்கோடு கோட்டம் நாமக்கல் மின்பகிர்மான வட்ட தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் சார்பில் பிரதம மந்திரி சூரிய வீட்டு மின் திட்டத்தில் (பிஎம் சூர்யகர் முஃ பட் பிஜிலி யோஜனா) சோலார் பேனல் விற்பனையாளர்கள் வங்கி அதிகாரிகளுடன் இணைந்து நடத்தும் மாபெரும் சோலார் மேளா கொங்கு வேளாளர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. மேளாவை திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன், நகர்மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு ஆகியோர் துவக்கி வைத்தனர்.நிகழ்ச்சிக்கு நாமக்கல் மேற்பார்வை பொறியாளர் சபாநாயகர் தலைமை வகித்தார் திருச்செங்கோடு செயற்பொறியாளர் சுந்தர்ராஜன் அனைவரையும் வரவேற்றார் உதவி செயற் பொறியாளர்கள் யோகநாதன், சீனிவாசன், சண்முகம், காந்திமதி, அமுதா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.திட்டம் குறித்து விளக்கிப் பேசிய நாமக்கல் மின் பகிர்மான கழக மேற்பார்வை பொறியாளர் சபாநாயகர் கூறியதாவது கடந்த பிப்ரவரி 2024 இல் இருந்துவீட்டு மின் இணைப்புகளுக்கு சோலார் பேனல் அமைக்க வேண்டும் என்கிற பணி மத்திய மாநில அரசுகளால் துவக்கப்பட்டது மாநிலம் முழுவதும்ஒரு கோடி பேனல்கள் அமைக்க வேண்டும் என்றும் நமது மாவட்டத்தை பொருத்தவரை 13,000 பேனல்கள் அமைக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது ஆனால்சுமார் 1900சோலார் பேனல்கள் மட்டுமே அமைக்கப் பட்டது.எனவே இதனை விரைவாக செயல்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டதன் பெயரில் இதுபோன்ற மேலாக்கல் நடத்தப்படுகிறது நமது மாவட்டத்தில் 8 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன அதில் ஆறு லட்சம் மின் இணைப்புகள் குடியிருப்பு இணைப்புகளாக உள்ளன ஆயிரம் யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் இணைப்புகள் 50 ஆயிரத்திற்கும் மேல் உள்ளது 99 பிரிவுகளாக இயங்குகிற நமது மாவட்ட பகுதியில்22 அங்கீகரிக்கப்பட்ட சோலார் பேனல் அமைக்கும் வெண்டர்கள் உள்ளனர் அவர்களை இணைத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி சோலார் பேனர்கள் அமைப்பதன் மூலம் மின் கட்டணம் நாளில் ஒரு பங்காக குறையும் என்பதை விளக்கி கூறவும் உள்ளாட்சி அமைப்புகளில் இருப்பவர்கள் பொதுமக்களிடம் எடுத்துச் சென்று கூற வேண்டும் என்கிற அடிப்படையில் பணிகள் மேற்கொண்டு வருகிறோம் எனக் கூறினார். மேளாவை துவக்கி வைத்து பேசியதிருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் கூறியதாவது சோலார் பேனல்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த மேளா நடத்தப்படுகிறது இதில் ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும் அடுத்து மின்கட்டணமே செலுத்த வேண்டியதில்லை என்கிற நிலையை பொதுமக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் நகரப் பகுதிகளில் குறைந்தபட்சம் 100 பேருக்கு ஆயிரம் ரூபாய் நாமே கட்டி பல்வேறு வார்டுகளிலும் இந்த பேனல் .அமைக்கும் முறையை நடைமுறைப் படுத்தினால் அதனைப் பார்த்து மற்றவர்களும் ஊக்கமுடன் சோலார் பேனல் அமைக்க முன்வருவார்கள் இதே போல் மின்வாரியத்தினர் நகராட்சி வசம் உள்ள கொக்கராயன் பேட்டை பகுதியில் ஏற்கனவே குடிநீர் எடுக்க பயன்படுத்த பட்ட ஆறு ஏக்கர் நிலத்தை தற்போது சோலார் பேனல் அமைக்க பயன்படுத்தினால் மின்கட்டண நிலுவை அதிகம் இருப்பதாக கூறும் நகராட்சிக்கு அது உபயோகமாக இருக்கும் இதே போல் நகரப் பகுதிகளில் உள்ள நகராட்சி பேருந்து நிலையம் அரசு அலுவலகங்களில் சோலார் பேனல்கள் அமைத்தால் அந்தந்த அலுவலகங்களின்மின் தேவை பூர்த்தியாகும் என்பதை ஆலோசனையாக தெரிவிக்கிறேன் நகர் மன்ற தலைவர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இதனைபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேளாவை ஒட்டி திருமண மண்டபத்தில் காட்சிப்படுத்தப் பட்டிருந்த சோலார் பேனல்கருவிகள் மீட்டர்கள் வைத்திருந்த அரங்குகளைதிருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு ஆகியோர் பார்வையிட்டனர்
Next Story


