காங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு

X
Kangeyam King 24x7 |13 Nov 2025 7:58 PM ISTகாங்கேயத்தில் வெறிநாய்கள் கடித்து 4 செம்மறி ஆடுகள் சாவு இழப்பீடு வழங்க கோரிக்கை
காங்கேயம் பழைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் சம்பத். விவசாயி. இவர், ஆடுகளும் வளர்த்து வருகிறார். நேற்று இவர், பழையகோட்டை சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள தோட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். நேற்று மாலை 4 மணி அளவில் 2 வெறிநாய்கள் அந்த தோட்டத்துக்குள் புகுந்தன. பின்னர் அங்கிருந்த 2 குட்டிகள் உள்பட 4 ஆடுகளை கடித்து குதறின. இதில் அந்த 4 ஆடுகளும் பரிதாபமாக இறந்து விட்டன. பின்னர் அந்த நாய்கள் அங்கிருந்து ஓடிவிட்டன. இதுகுறித்து அறிந்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் இறந்த ஆடுகளை பார்வையிட்டனர். மேலும் விவசாயிகள் வெறி நாய்களை கட்டுப்படுத்துவதோடு, இறந்து ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Next Story
